"தமிழ்நாட்டிற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சிக்குரியதே" - பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-26 11:31 GMT


Live Updates
2022-05-26 15:45 GMT

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி வந்தே..மாதரம்" "வந்தே..மாதரம்" முழக்கத்தோடு தனது உரையை முடித்து புறப்பட்டார். 

2022-05-26 14:39 GMT

தமிழ்நாடு மண் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மொழி நிலையானது, நித்தியமானது, தமிழ் கலாசார உலகளாவியது. மக்கள் கலாசாரம் மொழி எல்லாமே இங்கு தலைசிறந்தது - பிரதமர் மோடி

2022-05-26 14:30 GMT

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு, இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி

யாழ்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான் தான். ஈழத்தமிழர்கள் உள்பட அனைவருக்கும் இந்தியா உதவி வருகிறது - பிரதமர் மோடி

2022-05-26 14:08 GMT

* "உலகம் முழுவதும் பொங்கல், தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றன" - பிரதமர் மோடி

* 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாரதியார் பாடலை சுட்டிக்காட்டி பிரதமர் பேச்சு

* பிரதமர் வீடு வழங்கும் திட்டம் மிகவும் முக்கியமான உலகத்தரம் வாய்ந்த திட்டம்"

* "பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன" - பிரதமர் மோடி

* "தமிழ் மொழியை மேலும் வளர்க்க மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது "

* "பனாரஸ் இந்து பல்கலையில் தமிழ் மொழி படிப்பதற்காக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது" - பிரதமர் மோடி

2022-05-26 14:00 GMT

* பெங்களூரு-சென்னை 4 வழி விரைவு சாலையின் 3ம் கட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

* துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேல் நிலை சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

* சென்னையில் அமையவுள்ள சரக்கக பூங்காவுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

* ஓசூர் - தருமபுரி இடையேயான 2ம், 3ம் கட்ட நெடுஞ்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

* மீன்சுருட்டி - சிதம்பரம் இடையிலான புதிய சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

 * 5 ரயில் நிலையங்களின் மறு சீரமைப்பு பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

*ரூ. 256 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் - செங்கல்பட்டு 3வது பாதையை பிரதமர் மோடி திறப்பு

* ரூ. 450 கோடி செலவில் மதுரை - தேனி அகலப்பாதையில் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

*  தமிழக மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் அத்தனையும் சிறப்பு வாய்ந்தது - பிரதமர் மோடி

2022-05-26 13:45 GMT

'வணக்கம்' என தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி . தமிழக மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் அத்தனையும் சிறப்பு வாய்ந்தது - பிரதமர் மோடி

2022-05-26 13:34 GMT

சென்னை துறைமுகம் - மதுரவாயல் சாலை திட்டம் உள்பட பல சாலைத்திட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

2022-05-26 13:33 GMT

மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்றுள்ள அரசு நிகழ்ச்சி இது.கல்வி, பொருளாதாரம், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு சிறப்பாக விளங்குகிறது அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையே திராவிட மாடல் என்று கூறுகிறோம்.

மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் நிதிப்பங்கீடு காலப்போக்கில் மாறும் ஒன்றிய அரசின் திட்டங்களில் மாநில அரசின் பங்கு அதிகம்.ஒட்டுமொத்த இந்திய நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது.

ஹிந்திக்கு இணையான தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.

நவீன தமிழ்நாட்டின் தந்தை கலைஞர் சொன்னதுபோல 'உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்’. எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை எட்ட, மக்கள் நலத்திட்டங்களை இணைந்து செயல்படுத்துவோம்.

தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். சாலை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு காலப்போக்கில் குறைக்கப்படுகிறது.வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி

இந்திக்கு நிகராக அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். நீட் விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டுமென பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கட்சத்தீவை மீட்டெடுத்து உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம்.நீட் விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டுமென பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

ஒன்றிய அரசின் நிதி குறைப்பால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை ₹14,000 கோடியை விரைந்து வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடிக்கு நன்றி என கூறினார்.

2022-05-26 13:16 GMT

வரவேற்புரையாற்றிய இணையமைச்சர் எல்.முருகன், கூறியதாவது:-

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். தமிழக மக்கள் சார்பாக பிரதமரை வருக வருக என வரவேற்கிறேன். முதல்- அமைச்சரையும் வரவேற்கிறேன்.

தொடர்ந்து சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய எல்.முருகன், “யார் என்ன சொல்கிறார்களோ அதை செய்வது அரிது. அரிதான மக்களில் ஒருவர் பிரதமர். சொன்னதை சொன்னபடி செய்திருக்கிறீர்கள். அதற்காக தமிழக மக்களின் சார்பில் நன்றி” என்று கூறினார்.

2022-05-26 13:07 GMT

சென்னை வந்த பிரதமர் மோடியை “திருவிளையாடல் புராணம்” நூலை அளித்து வரவேற்றார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Tags:    

மேலும் செய்திகள்