மாணவியிடம் உல்லாசம் தனியார் நிறுவன ஊழியர் கைது
திண்டிவனம் அருகே மாணவியிடம் உல்லாசம் தனியார் நிறுவன ஊழியர் கைது;
திண்டிவனம்
திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ கம்ப்யூட்டர் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் அதே கிராமத்தை சேர்ந்த பாரதி மகன் விஜய்(வயது 23) என்பவரும் காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் விஜய் உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் பின்னர் திருமணத்துக்கு மறுத்துவிடடதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவுசெய்து விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.