எய்ம்ஸ் மருத்துவமனையை தேடி அலைந்து எம்.பி.க்கள் போராட்டம்

எய்ம்ஸ் மருத்துவமனையை தேடி அலைந்து எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-23 21:01 GMT

திருப்பரங்குன்றம், 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95 சதவீதம் முடிந்துவிட்டதாக சுகாதாரத்துறை முன்னாள் மத்திய மந்திரியும் பா. ஜனதா கட்சியின் தேசிய தலைவருமான நட்டா தெரிவித்து இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து 95 சதவீதம் வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே? என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மாணிக்கம்தாகூர் எம்.பி.யும், கம்யூனிஸ்டு கட்சி கொடிகளுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வெங்கடேசன் எம்.பி.யும் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் ஊராட்சி பகுதிக்கு வந்தனர். பின்னர் கோ.புதுப்பட்டியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள இடத்தினை பார்வையிட்டு எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? என்று தேடி அலைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தனக்கன்குளம் எம்.பி.எஸ். பழனி குமார், காங்கிரஸ் பொன்மகாலிங்கம், நாகேஸ்வரன், சரவண பகவான், சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்