ராஜராஜன் காலச் செம்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

கடலூர் மாவட்டம், மருங்கூரில் ராஜராஜன் காலச் செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.;

Update:2024-07-01 18:55 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம் மருங்கூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் ராஜராஜ சோழன் காலச் செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடலூர் மாவட்டம், மருங்கூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் ராஜராஜன் காலச் செம்பு நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நாணயம் 23.3 மி.மீ விட்டமும் 2.5 மி.மீ தடிமனும் 3 கிராம் எடையும் கொண்டது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்