சிகிச்சை முடிந்து மீண்டும் கோவை திரும்பிய சத்குரு ஜக்கி வாசுதேவ்

சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நலம் முன்னேறிய நிலையில் கடந்த 27-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Update: 2024-04-01 11:43 GMT

கோவை,

கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் மற்றும் ஈஷா அறக்கட்டளையின் தலைவரான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு கடந்த 17-ந்தேதி அவசரகால மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருடைய உடல்நலம் பற்றி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் விசாரித்து அறிந்தனர்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு, சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நலம் முன்னேறிய நிலையில் அவர் கடந்த 27-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று கோவை திரும்பினார். அவருடைய சீடர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரை வரவேற்க கோவை விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

அவரை பார்த்ததும் சில சீடர்கள் கண்ணீர் விட்டு அழுது அவரை வரவேற்றனர். சிலர் கையில் தீபங்களுடன் அவரை வரவேற்றனர். பின்னர் அவர், அங்கிருந்து புறப்பட்டு வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.


பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் ஒன்று கூடி அவர்களின் பாரம்பரிய முறையில் சத்குருவிற்கு உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பு அளித்தனர். மேலும், சத்குருவின் வருகையையொட்டி, ஒட்டுமொத்த ஈஷா யோக மையமும் வண்ணமயமான அலங்காரங்களுடன் விழா கோலம் பூண்டது.

ஈஷாவில் தங்கி இருக்கும் ஆசிரமவாசிகளும், தன்னார்வலர்களும் சத்குருவை மீண்டும் பார்த்ததில் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர். பலரும் சத்குருவை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்