மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.;
காரைக்குடி,
சோமநாதபுரம் போலீஸ் சரகம் மணப்பட்டி ஆற்றில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் சிலர் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இது குறித்த தகவலறிந்த போலீசார் அங்கு ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் மணல் கடத்திய 3 பேர் டிராக்டரையும், 2 மோட்டார்சைக்கிள்களையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து டிராக்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.