பழனி அருங்காட்சியகத்தில் பாம்புகள் புகைப்பட கண்காட்சி

பழனி அரசு அருங்காட்சியகத்தில் பாம்புகள் புகைப்பட கண்காட்சி தொடங்கியது.;

Update:2022-08-02 21:39 IST

பழனி அரசு அருங்காட்சியகத்தில் வரலாறு சார்ந்த புகைப்படங்கள், பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாதந்தோறும் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதம் பாம்புகள் பற்றிய புகைப்பட கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியில், இந்தியாவில் அதிகமாக வாழும் பாம்புகள், கொடிய விஷமுள்ள பாம்புகள், விஷமற்ற பாம்புகள், பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி, பாம்புகளின் ஆயுட்காலம், அதன் நன்மைகள் குறித்த விவரம் அடங்கிய புகைப்படங்கள், விளக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதனை மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பார்வையிட்டனர். இதுகுறித்து அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் கூறுகையில், பாம்புகள் பற்றி அறியப்படாத பல்வேறு புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. வருகிற 16-ந்தேதி வரை கண்காட்சி நடைபெறும். பொதுமக்கள் பார்வையிட்டு பயன் பெறலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்