மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு கலந்தாய்வு

பொள்ளாச்சி அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெற்றது.

Update: 2023-05-29 19:15 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெற்றது.

மாணவர் சேர்க்கை

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்கு இளநிலை பட்டப்படிப்பிற்கு ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் தேவையான ஆவணங்களுடன், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தனர்.

அதன்படி கடந்த 8-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொள்ளாச்சி அரசு கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம், பி.எஸ்.சி. கணிதம், பி.பி.ஏ., பி.காம். பி.ஏ, பி.காம். சி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தலா 60 இடங்கள் வீதம் 300 இடங்கள் பூர்த்தி செய்யப்படும். இதற்கிடையில் மாணவ-மாணவிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் 4613 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

சிறப்பு கலந்தாய்வு

இதை தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கு தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று சிறப்பு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு மற்றும் தேசிய மாணவர் படை பிரிவில் 10 மாணவ- மாணவிகள் சேர்க்கை பெற்றனர். இதற்கான ஆணையை கல்லூரி முதல்வர் சுமதி வழங்கினார்.

பொது கலந்தாய்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை), 3 மற்றும் 5-ந்தேதிகளில் நடைபெறுகிறது. 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 6, 7 மற்றும் 8-ந்தேதிகளிலும் நடைபெறும். மேலும் மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதிகளில் உரிய ஆவணங்களுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று கல்லூரி முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்