தன்னார்வலர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

தன்னார்வலர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.;

Update:2023-02-17 00:15 IST

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, சார்பில் சிவகங்கை வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சிவகங்கை ஒன்றியத்தில் மொத்தம் 78 மையங்களில் தன்னார்வலராக பணிபுரிபவர்களுக்கு இந்த போட்டிகள் நடைபெற்றது. இதில் 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். போட்டியினை மேற்பார்வையாளர் ரூபாராணி தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் கோவிந்தம்மாள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்