ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி; ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.

Update: 2023-06-21 20:08 GMT

மந்தாரக்குப்பம், 

மந்தாரக்குப்பம் அடுத்த ரோமாபுரியில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 19-ந் தேதி அருட்தந்தையர்கள் நிர்மல்ராஜ், லாரன்ஸ், சைமன் அந்தோணிராஜ் மற்றும் புனித பால் ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக மாலையில் புதுச்சேரி ஜென்மராக்கினி பேராலய பங்குத்தந்தை ரொசாரியோ, இருப்புக்குறிச்சி பங்கு தந்தை நிர்மல்ராஜ், புதுக்கோட்டை பங்கு தந்தை ரெஜிஸ், ஏற்காடு செல்வநாயகம் ஆகியோர் தலைமையில் ஆண்டு பெருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி நடந்தது. ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட பவனியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கூனங்குறிச்சி பங்குத்தந்தை கிறிஸ்துராஜ், ரோமாபுரி வேதியர் தேவராஜ் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்