வாலிபருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது

மத்தூரில் இறைச்சி கடையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-12-26 00:15 IST

மத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை சேர்ந்தவர் இம்ரான் (வயது25). இவர் சின்னஏரி அருகே இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இம்ரானுக்கும், அவரது உறவினர்களான சாதிக்பாஷா (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இம்ரானை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதை தட்டி கேட்ட ரம்ஜான் (45) என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. காயம் அடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாதிக்பாஷா உள்பட 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்