காடையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
காடையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெரற்றது.;
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. அப்போது பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற வேலை திட்டத்தில் வேலை கொடுக்க கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். நிகழ்ச்சிக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் கணபதி, கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஈஸ்வரன், ஓமலூர் தாலுகா தலைவர் சின்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.