193 தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை

வேலூர் மாவட்டத்தில் 193 தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

Update: 2022-05-30 17:44 GMT

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நுழைவுநிலை வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 193 பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை பள்ளி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், மாணவர்களின் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் நடைபெற்றது. விண்ணப்பித்த நபர்களின் பெயர் அனைத்தும் துண்டு சீட்டுகளில் எழுதப்பட்டு குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு செய்யப்பட்டனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மையமாக பல பள்ளிகள் செயல்பட்டதால் அங்கு மாலை வேளையில் குலுக்கல் நடைபெற்றது. மாணவர் சேர்க்கையை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட சில குழந்தைகள் சேர்க்கைக்கு வரவில்லை. இதுகுறித்து அந்த குழந்தையின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த குழந்தையை காத்திருப்பு பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. மாணவர் சேர்க்கை விவரங்களை தனியார் பள்ளிகள் படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்