களக்காடு-சிதம்பரபுரம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி ஆய்வு

களக்காடு-சிதம்பரபுரம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி ஆய்வு செய்யப்பட்டது.;

Update:2022-09-12 01:26 IST

களக்காடு:

களக்காட்டில் இருந்து சிதம்பரபுரம் செல்லும் சாலையில் நாங்குநேரியான் கால்வாய் குறுக்கே உள்ள தரைமட்ட பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, பாலம் வெள்ளத்தில் மூழ்கி விடுவதால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்படுவதுடன் உயிர் சேதமும் ஏற்படுகிறது. எனவே தரைமட்ட பாலத்தை அகற்றி விட்டு புதியதாக உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் புதியதாக உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அப்பகுதியில் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ் பார்வையிட்டார். அவருடன் கவுன்சிலர்கள் கவுரி, தாமரைசெல்வி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்