திருமணமாகாத விரக்தியில் எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-11-07 18:45 GMT

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே திருமணமாகாத விரக்தியில் எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

எலக்ட்ரீசியன்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி ஊராட்சி மேல தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் பாலக்குமார் (வயது 31). எலக்ட்ரீசியன். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் சமீபகாலமாக பாலக்குமார் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்று எண்ணி வருந்தியதாகவும் தெரிகிறது.

விசாரணை

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாலக்குமார் இனிமேல் தனக்கு யாரும் பெண் தர மாட்டார்கள் என கருதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாலக்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்