பெட்ரோல் இல்லாமல் நின்ற பைக்.. "டோப்" செய்வது போல் நடித்து கும்பல் கைவரிசை...!

வளசரவாக்கத்தில் கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை கடத்தி வழிப்பறி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-30 09:20 GMT

கைது செய்யப்பட்ட சதிஷ் மற்றும் பார்த்தசாரதி

போரூர்:

சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் அத்வைத் தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர் சஞ்சய் கல்லூரி மாணவர்.நண்பர்கள் இருவரும் கடந்த 27-ந் தேதி இரவு ஆலப்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

வளசரவாக்கம் அன்பு நகர் பகுதியில் வந்தபோது பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நின்றுவிட்டது. இதையடுத்து அவர்கள் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் மர்ம கும்பல் பெட்ரோல் பங்க் வரை "டோப்" செய்கிறோம் என்று கூறியுள்ளனர். உதவி செய்வது போல நடித்து இருவரையும் பாழடைந்த கட்டிடத்திற்குள் கடத்தி சென்றனர். அங்கு அவர்களை மிரட்டி ரூ.3 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த வாட்ச், மற்றும் "இயர் பேட்" ஆகியவற்றை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த, கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மதுரவாயல் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, திருவேற்காட்டை சேர்ந்த சதிஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாட்ச் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்