தொழிலாளி வீடு தீயில் எரிந்து சேதம்

காரிமங்கலம் அருகே தொழிலாளி வீடு தீயில் எரிந்து சேதமானது.;

Update:2023-05-20 00:22 IST

காரிமங்கலம்

காரிமங்கலம் அருகே உள்ள அடிலம் சப்பாணிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமன். கூலித்தொழிலாளி. இவரது வீட்டில் இருந்து திடீரென புகை வந்தது. இதையடுத்து ராமன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் வீடு தீயில் எரிந்்து சேதமானது. மேலும் வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் எரிந்தது. இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீயில் எரிந்து சேதமான நகை, பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்