என்ஜினீயர் வீட்டில் திருட முயன்றவர் கைது

சங்கரன்கோவில் அருகே என்ஜினீயர் வீட்டில் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-06-24 00:15 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள கீழவயலியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் திருட்டு முயற்சி நடந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சுப்புலாபுரத்தை சேர்ந்த மரியதாஸ் மகன் முருகேசன் (வயது 35), முனியசாமி வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்