பேட்டை:
சுத்தமல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் ஹரிகரசுதன் (வயது 19). இவர் திருப்பூரில் பேக்கரி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். ஹரிகரசுதன் அங்குள்ள ஒரு கடையில் ஜூஸ் வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கருத்தப்பாண்டி, ஹரிகரசுதனை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்குப்பதிவு செய்து கருத்தப்பாண்டியை கைது செய்தார்.