பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-04 00:15 IST

விழுப்புரம் அருகே கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி கலையரசி (வயது 47). இவருக்கும், உறவினர் வேல்முருகன் (34) என்பவருக்கும் வழிப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் வேல்முருகன், கலையரசியை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கலையரசி, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்