தகவல் தெரிவிக்க கட்டணமில்லா டெலிபோன் எண்

தகவல் தெரிவிக்க கட்டணமில்லா டெலிபோன் எண் அறிமுகப்படுத்தப்பட்டது.;

Update:2023-08-19 00:54 IST


பொது வினியோக திட்ட பொருட்களான அரிசி, கோதுமை எண்ணெய் ஆகியவற்றை பதுக்குவதும் மற்றும் கடத்துவதும் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-ன் கீழ் குற்றமாகும். தற்போது ரேஷன் பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி 1800 699 59 50 என்ற கட்டணமில்லா டெலிபோன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்