ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததால் பரபரப்பு

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததால் பரபரப்பு;

Update:2023-06-12 03:04 IST

ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், இ-சேவை மையம், காப்பீட்டு திட்ட அலுவலகம், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலையில் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளை திடீரென முறிந்து கீழே விழுந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. எனினும் கிளை முறிந்து விழுந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்