கீழ்பென்னாத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் சாவு

கீழ்பென்னாத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2022-11-10 19:23 IST

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். அவரது மனைவி அங்கயற்கன்னி (வயது 33). இவர், நிலத்தில் வெண்டைக்காய் பறித்து கொண்டிருந்த போது பாம்பு கடித்ததாக தெரிகிறது.

இதில் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அங்கயற்கன்னி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்