2 வயது குழந்தையுடன் பெண் மாயம்

2 வயது குழந்தையுடன் பெண் மாயமானார்.;

Update:2022-11-12 01:02 IST

திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திவ்யபாரதி (வயது 28). இந்த தம்பதியின் மகன் அக்‌ஷ்ரண்ட் (2). நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் திவ்யபாரதி மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றனர். அதன் பின் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் மகனையும், மனைவியையும் தேடினார். உறவினர்கள் வீடுகளில் ேதடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் மாயமான தாய், மகனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்