திருமங்கலம்
திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டி.புதுப்பட்டி பாலம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும், திருமங்கலம் அருகே உள்ள கொண்டுரெட்டியபட்டியை சேர்ந்த சின்னையன்(43) என்பதும், இவர் விழுப்புரம் பகுதியில் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.