இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.;

Update:2024-04-22 12:52 IST

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி 00.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7.94 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 109.32 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் , 97.8 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.0-magnitude quake hits Java, Indonesia -- GFZநிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. கடந்த 9ம் தேதி மேற்கு பப்புவா மாகாணத்தில் 6.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்