அமெரிக்காவில் ராணுவ தளவாடங்கள் ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-12 00:22 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மேற்கு மாகாணமான கொலராடோவில் உள்ள கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகரில் அமெரிக்க ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்தநிலையில் கலிபோர்னியாவில் இருந்து ராணுவ தளவாடங்களை ஏற்றிக் கொண்டு கொலராடோ ராணுவ தளத்துக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

காலை 6 மணியளவில் போர்ட் கார்சன் என்னும் இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் 13 பெட்டிகள் சேதமாகி உருக்குலைந்தன. சம்பவம் அறிந்த போலீசார் ராணுவ வீரர்களின் உதவியுடன் அப்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயிலில் ஏற்றி செல்லப்பட இருந்த ராணுவ டாங்கிகளின் உதிரி பாகங்கள் மற்றும் பிற உபகரணங்கள் ஆகியவற்றை மீட்கும் பணி மும்முரமாக நடக்கிறது. பயங்கர ஆயுதங்கள் பாரம் இல்லாத காரணத்தால் அசாம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்