ஆப்கானிஸ்தானுடனான உறவு மோசமடைந்தால் பயங்கரவாதத்திற்கு எதிரான முடிவில்லாத போருக்கு வழிவகுக்கும் - இம்ரான் கான் எச்சரிக்கை

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பிற்கு எதிரான அந்நாட்டு அரசின் நடவடிக்கைகளை இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.;

Update:2023-01-11 22:08 IST

இஸ்லாமாபாத்,

தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பிற்கு எதிராக அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பயங்கரவாதம் குறித்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய இம்ரான் கான், அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் நாடக்கூடாது என்றும், ஆப்கானிஸ்தானுடனான உறவுகள் மோசமடைந்தால் பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றொரு முடிவில்லாத போர் பாகிஸ்தானுக்கு சாபமாக அமையும் என்றும் எச்சரித்துள்ளார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்