"இஸ்ரேல் ஆயுத உதவி வழங்காதது அதிர்ச்சி அளிக்கிறது" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ஆயுத உதவிகளை இஸ்ரேல் வழங்காதது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக ஜெலன்ஸ்கி ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-25 04:19 GMT

கீவ்,

உக்ரைன் மீது தொடர்ந்து ஏழு மாதங்களாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், இஸ்ரேல் அரசிடம் ஆயுத உதவிகள் வழங்குமாறு உக்ரைன் அரசு கோரியிருந்தது.

குறிப்பாக காஸாவில் பாலஸ்தீனிய போராளிகளால் ஏவப்பட்ட ராக்கெட்டுகளை, வானிலேயே இடைமறித்து அளிக்க பயன்படுத்தப்பட்ட 'அயர்ன் டோம்' என்ற ஆயுத அமைப்பை வழங்குமாறு ஜெலன்ஸ்கி கோரியிருந்தார். ஆனால் தாங்கள் கோரிய ஆயுத உதவிகளை இஸ்ரேல் வழங்காதது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக ஜெலன்ஸ்கி ஏமாற்றம் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்