இலங்கையில் மலைக்க வைக்கும் சிலிண்டர் விலை...!

இலங்கையில் 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 ஆயிரத்து 850 இலங்கை ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.;

Update:2022-06-06 14:33 IST

கொழும்பு,

இலங்கையில் 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 ஆயிரத்து 850 இலங்கை ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது லாப்ட் கேஸ் என்ற தனியார் நிறுவனம், மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் சமையல் எரிவாயு விற்பனையை தொடங்கியுள்ளது. இதன் 5 கிலோ சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 740 இலங்கை ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்தும், பலருக்கும் சிலிண்டர் கிடைக்கவில்லை. விலை உச்சமடைந்த பின்னரும் பற்றாகுறை நிலவி வருகிறது. கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்