லைவ் அப்டேட்ஸ்: எங்கள் நாட்டின் மீது உக்ரைன் ஏவுகணைகளை வீசியது - பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு

Update: 2022-07-02 22:25 GMT
Live Updates - Page 2
2022-07-02 22:26 GMT

மின்ஸ்க்,

உக்ரைன் மீது ரஷியா 130-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் தங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ குற்றச்சாட்டியுள்ளார். உக்ரைனின் ஏவுகணை தாக்குதலை பெலாரஸ் ராணுவம் வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் நடுவானில் இடைமறித்து அழித்ததாக அதிபர் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.

உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் போரில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்