லைவ் அப்டேட்ஸ்: எங்கள் நாட்டின் மீது உக்ரைன் ஏவுகணைகளை வீசியது - பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு

Update: 2022-07-02 22:25 GMT






Live Updates
2022-07-03 13:27 GMT

உக்ரைனின் கிழக்கு நகரமான ’ஸ்லோவியன்ஸ்க்’ மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நகரத்தின் மேயர் தெரிவித்துள்ளார். ரஷிய படைகளின் இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.

2022-07-03 08:31 GMT


குர்ஸ்மாகாணத்தில் குண்டுவீச்சு தாக்குதல் நடந்துள்ளது - ரஷிய ஊடகங்கள் தகவல்

இதுதொடர்பாக ரஷியாவின் குர்ஸ்க் ஒப்லாஸ்ட்டின் கவர்னர் ரோமன் ஸ்டாரோவோயிட் கூறுகையில், ரஷியாவின் வான் பாதுகாப்பு படை, குர்ஸ்க் அருகே இரண்டு உக்ரேனிய ஸ்ட்ரிஷ் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது என்று அவர் கூறினார்.

2022-07-03 07:40 GMT


ரஷியாவின் பெல்கொரோட் மீதான தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 50 வீடுகள் சேதமடைந்ததாகவும் அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக பெல்கோரோட் ஒப்லாஸ்ட் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறுகையில், நகரில் 11 அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் 39 சிறிய வீடுகள் சேதமடைந்துள்ளது. நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

2022-07-03 06:33 GMT


உக்ரேனியப் படைகள் கார்கிவ், ஸ்லோவியன்ஸ்க் அருகே ரஷிய தாக்குதல்களை முறியடித்துள்ளதாக தகவல் .

ரஷிய படைகள் லிசிசான்ஸ்க் மற்றும் வெர்க்னோகாமியன்ஸ்கே அருகே நிலைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. மேலும் இவானிவ்கா, கெர்சன் ஒப்லாஸ்ட் மீது வான்வழித் தாக்குதல்களையும், மைக்கோலைவ் மாகாணத்தில் ஏவுகணைத் தாக்குதல்களையும் ரஷியா நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

2022-07-03 05:58 GMT

ரஷியா ஆதரவு நிலைப்பாடு காரணமாக தங்கள் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணைகளை வான் தடுப்பு சாதனங்களை கொண்டு வானிலே இடைமறித்து தங்கள் ராணுவம் அழித்ததாக லுகான்ஸ்கோ கூறினார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் இதேபோல் தங்கள் ராணுவ நிலைகளை குறிவைத்து உக்ரைன் படைகள் தாக்க முயன்றதாக அவர் தெரிவித்தார். உக்ரைன் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் எங்களுக்கு கோபம் மூட்டுவதாக அதிபர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

2022-07-03 04:39 GMT


ரஷியாவின் பெல்கோரோட் ஒப்லாஸ்டில் குண்டுவெடிப்புகள் நடந்ததாக அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பெல்கோரோட் ஒப்லாஸ்ட் கவர்னர் வியாசெஸ்லாவ் கிளட்கோவ் கூறுகையில், இந்த பகுதியில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. ஒரு குடியிருப்பு கட்டிடம் தீப்பிடித்து எரிந்து வருகிறது. மூன்று பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புகளுக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

2022-07-03 03:43 GMT

ஒடேசாவில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் ரஷியா ஏவுகணை தாக்குதல் : உயிரிழப்பு எதுவும் இல்லை - உக்ரைன் இராணுவம் தகவல்

29 ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும், சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர் மற்றும் இரண்டு பீரங்கி அமைப்புகள், ஆறு கவச வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் தெற்கு செயல்பாட்டுக் கட்டளை தெரிவித்துள்ளது.

2022-07-03 02:11 GMT


டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாணத்தில் ரஷிய ராணுவத்தின் குண்டுவீச்சு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர், குழந்தைகள் உட்பட 3 பொதுமக்கள் காயமடைந்தனர்.

மேலும் இதுதொடர்பாக டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ கூறுகையில், “ரஷியப் படைகள் டோப்ரோபிலியா சமூகத்தைத் தாக்கியுள்ளது. காயமடைந்தவர்களில் நான்கு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு குழந்தைகளும் அடங்குவர்” என்று அவர் தெரிவித்தார்.

2022-07-03 01:05 GMT


உக்ரைன் போரில் லிசிசான்ஸ்க் நகரம் மீது ரஷியா தீவிர தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 5-வது மாதமாக நீடிக்கிறது. கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளைக் கொண்டுள்ள டான்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தற்போது கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் உள்ள லிசிசான்ஸ்க் நகரத்தை கைப்பற்றும் முயற்சியில், அந்த நகரத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் தாக்கி வருகின்றன. இந்த தகவலை லுகான்ஸ்க் கவர்னர் செர்கிய் ஹைடாய் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரமாக அனைத்து விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்