ஆஸ்திரேலியாவில் கனமழை: நூற்றுக்கணக்கான வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Update: 2022-10-16 20:10 GMT

கோப்புப்படம் 

மெல்போர்ன்,

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில், கடந்த இரண்டு வருடங்களில் பலத்த மழையால் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

புறநகர்ப் பகுதிகளில் தெருக்களில் விடப்பட்ட கார்கள் வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

விக்டோரியாவின் தெற்கே உள்ள ஒரு தீவு மாநிலமான டாஸ்மேனியாவின் வடக்குப் பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அதே நேரத்தில் கனமழை காரணமாக 120 சாலைகள் மூடப்பட்டன.

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள மக்கள் மிகவும் பதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்