மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி அதிரடி காட்டிய வடகொரியா

வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

Update: 2023-06-15 19:09 GMT

பியாங்யாங்,

உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

இந்த நிலையில், வடகொரியா கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. ஆனால், இது குறித்து விரிவான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்க படைகளுடன் இணைந்து தென் கொரியா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இன்று வட கொரிய-தென் கொரிய எல்லைக்கு அருகே மிகப்பெரிய அளவில் போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்