பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு... கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டம்

திருவள்ளூரில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2023-06-21 07:37 GMT

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வடக்குராஜ வீதியில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் திருவள்ளூர், ஈக்காடு, வள்ளுவர்புரம், காக்களூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளி சேதம் அடைந்ததால் கோர்ட்டு உத்தரவுபடி பள்ளியை வேறு இடத்திற்கு தற்காலிகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக பள்ளி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்த தகவல் பள்ளியின் வெளியே ஒட்டப்பட்டிருந்ததை அறிந்து மாணவர்களின் பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். மேலும் மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து புத்தகத்தை திறந்து படித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்