டென்மார்க்: வணிகவளாகத்தில் துப்பாக்கிச்சூடு - பலர் படுகாயம்
டென்மார்க்கில் உள்ள வணிகவளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்தனர்.;
Image Courtesy: AFP
கோபன்ஹேகன்,
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் உள்ள விமான நிலையம் அருகே வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில், அந்த வணிக வளாகத்தில் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. வணிக வளாகத்திற்கு வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு திடீரென தாக்குதல் நடத்தினார்.
இதனால், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறியடித்து வெளியே ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிக வளாகத்தில் இருந்த பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.