இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சேவல்கள் பறிமுதல் - இலங்கை கடற்படை நடவடிக்கை

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சேவல்களை பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.;

Update:2022-06-12 02:09 IST

கோப்புப்படம்

கொழும்பு,

இலங்கையில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேவல் சண்டையில் ஆர்வமுள்ள சிலர், இந்தியாவில் இருந்து சண்டைச் சேவல்களை கடத்தி வந்துள்ளனர்.

மன்னார் நகரில் இருந்து கொண்டு செல்ல அவற்றை ஓரிடத்தில் ஒன்றாக கட்டிவைத்திருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரை கண்ட சேவல் கடத்தல்காரர்கள், தப்பியோடிவிட்டனர். அவர்கள் விட்டுச்சென்ற 50 சேவல்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

அதில் 7 சேவல்கள் ஏற்கனவே இறந்திருந்தன. கைப்பற்றப்பட்ட சேவல்கள் மன்னார் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டன. சமீபத்தில் இந்தியாவில் இருந்து சண்டைக்காக கடத்திவரப்பட்ட 5 ஆட்டுகிடாக்களையும் இலங்கை கடற்படை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்