கவுதமாலா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி
விபத்தில் 19 பேர் படுகாயமடைந்தனர்.;
கவுதமாலா சிட்டி,
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கவுதமாலா. இந்நாட்டின் சொலோலா நகரில் உள்ள மலைப்பாங்கான சாலையில் இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
இந்நிலையில், மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சமின்மை நிலவியுள்ளது. அப்போது, சாலையோர பள்ளத்தாக்கில் பஸ் கவிழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.