பாகிஸ்தானில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது;

Update:2025-12-27 21:23 IST

இஸ்லமபாத்,

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 17 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலூசிஸ்தானின் கோலு, கலாட் மற்றும் பஞ்ச்கூர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த இரு தினங்களாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இந்த சண்டையில், பஞ்ச்கூர் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளும், கோலுவில் 5 பயங்கரவாதிகளும், கலாட் மாவட்டத்தில் 8 பயங்கரவாதிகளும் இருநாள்களில் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்