பெருவில் அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம்: தலைநகரை நோக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பேரணி
தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக நடந்த கலவரத்தில் இதுவரை 47 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.;
Image Credit: Thomson Reuters 2023
தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக நடந்த கலவரத்தில் இதுவரை 47 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மூத்த பெண் அரசியல்வாதியான டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார்.
ஆனால், பெட்ரோவின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்யக் கோரியும் , தற்போதைய அதிபர் டினா பொலுவார்டே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறியும் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில்
47 பேர் பலியாகி உள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த வர மூன்று நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.