மால்டோவா விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு

மால்டோவா விமான நிலையத்தில் துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.;

Update:2023-07-02 01:28 IST

ஐரோப்பிய நாடான மால்டோவாவின் தலைநகர் சிசினாவ் சர்வதேச விமான நிலையத்துக்கு தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் சென்றிருந்தார். ஆனால் விமான நிலையத்துக்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் விமான நிலையத்தில் இருந்த போலீசார் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து தஜிகிஸ்தானை சேர்ந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்