ஆன்மிகம்
வாரம் ஒரு அதிசயம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கை திருத்தலத்தில், பக்தவச்சல பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கை திருத்தலத்தில், பக்தவச்சல பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள தாயாரின் பெயர் கண்ணமங்கை நாயகி என்பதாகும். இந்த தாயார் சன்னிதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும்போது, தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும்போது, இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.