நீச்ச பங்க ராஜயோகம்

பலரும் அறிந்திருக்கக்கூடிய யோகங்களில் நீச்ச பங்க ராஜ யோகமும் ஒன்று.

Update: 2019-04-05 00:00 GMT
ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் தங்களது நீச்ச ராசியில் அமர்வதால், பலன் தரும் தன்மையை இழக்கின்றன. அந்த நிலையில் அந்த கிரகங்கள் அமர்ந்துள்ள ராசியின் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருப்பது, ஜென்ம லக்னம் அல்லது ராசிக்கு கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்திருப்பது ஆகிய நிலைகளில் நீச்ச பங்க ராஜயோகம் என்ற சிறப்பு பலன் கிடைக்கிறது. நீச்ச பங்கம் அடைந்த கிரகங்கள் முதலில் தனது காரக நிலைகளில் அவயோக பலன்களை தந்து, பிறகு யோக பலன்களை அளிக்கின்றன.

அதாவது, கல்வியில் பின்னடைவை சந்திக்க வைத்து, பிறகு சாதிக்க வைப்பது, வறுமையின் எல்லை வரை அழைத்துச் சென்று தன யோகத்தை அளிப்பது, வீட்டு வாடகைகூட தர இயலாத நிலையை உருவாக்கிய பின்னர், பல வீடுகளுக்கு சொந்தக்காரராக ஆக்குவது, நல்ல வேலை கிடைக்காமல் அலைக்கழித்த பின்னர், வெளிநாட்டு வேலை கிடைத்து வாழ்க்கைத்தரம் மாறுவது போன்ற பலன்களை அளிப்பது நீச்ச பங்க ராஜயோகம் ஆகும். நீச்ச பங்கம் பெற்ற கிரகத்தின் திசா காலம் முழுவதுமே நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் என்பது ஜோதிட வல்லுனர்கள் பலரது கருத்தாகும்.

நீச்ச கிரகம் நவாம்சத்தில் ஆட்சி, உச்சம் பெறுவது, நீச்ச கிரகம் வக்ர நிலையில் இருப்பது, நீச்ச கிரகம் மற்றொரு நீச்ச கிரகத்தைப் பார்ப்பது, நீச்ச கிரகத்தை உச்ச கிரகம் பார்ப்பது, நீச்சம் அடைந்த இரு கிரகங்கள் தங்களுக்குள் பரிவர்த்தனை அடைவது, நீச்ச கிரகம் நவாம்சத்தில் ஆட்சி, உச்சம் பெறுவது, நீச்சம் அடைந்த கிரகம், நீச்சம் பெற்ற கிரகம் கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்த நட்பு கிரகத்தின் தொடர்பு பெறுவது, நீச்சம் அடைந்த கிரகத்தை குரு பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் நீச்ச பங்க ராஜயோக பலன்கள் ஏற்படுவதாக ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் செய்திகள்