புராண கதாபாத்திரங்கள் : சகுனி

சகுனி பகடை விளையாட்டில் கைதேர்ந்தவர்.

Update: 2019-04-09 07:02 GMT
துரியோதனன் உள்ளிட்ட 100 பேர்களான கவுரவர்களின் மாமாவும், காந்தாரியின் அண்ணனும் ஆவார். சகுனி பகடை விளையாட்டில் கைதேர்ந்தவர். அவரை எதிர்த்து பகடை ஆடி வெல்வது எளிதான காரியம் அல்ல.

ஏனெனில் பகடை உருட்டும் விதம் வைத்தே எந்த எண் விழும் என்பதை கணிக்கும் அளவிற்கு திறமைசாலியாக அவர் இருந்தார். சகுனியின் சாமர்த்தியத்தால் தான் பகடை விளையாட்டில் பாண்டவர்கள், துரியோதனிடம் தோல்வியடைந்தனர்.

சகுனியின் சதியால் தான், தன்னிடம் தோற்ற பாண்டவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு துரியோதனன் கூறினான். கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் மாபெரும் குருஷேத்ர போர் நடந்ததற்கு, பகடை விளையாட்டால் பாண்டவர்களை வீழ்த்திய சகுனி முக்கிய காரணம் ஆவார். குருஷேத்ர போரில் சகுனியும் பங்கு பெற்றார். அவர் போர்க்களத்தில் சகாதேவனால் வீழ்த்தப்பட்டு உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்