விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-06-19 17:59 GMT

இலுப்பூர் ஜீவாநகரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காசி, ராமேசுவரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க எடுத்து வந்து செல்வவிநாயகர் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

இதேபோல் இலுப்பூர் அருகே மாம்பட்டியில் உள்ள தாமோதர கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தாமோதர கணபதி கோவில் மூலஸ்தான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்