மோகனூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மோகனூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2022-06-03 14:09 GMT

மோகனூர்:

மோகனூர் அருகே பேட்டப்பாளையத்தில் மகா கணபதி, முத்துமாரியம்மன், சந்தியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிேஷகம் நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 30-ந் தேதி கிராம சாந்தியுடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம், முளைப்பாரி அழைத்தல், வாஸ்து சாந்தி, முதற்கால யாக வேள்வி பூஜை, கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் நேற்று காலை 6 மணிக்கு 2-ம் கால யாக வேள்வி பூஜையும், கடம் புறப்பாடும் நடந்தது. பின்னர் காலை 9 மணிக்கு மகா கணபதி, முத்து மாரியம்மன், சந்தியப்பன் கோவில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிேஷகம், தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்