காக்கையாடி ஆறுமுகசுப்ரமணியசாமி கோவிலில் வழிபாடு

காக்கையாடி ஆறுமுகசுப்ரமணியசாமி கோவிலில் வழிபாடு

Update: 2023-01-30 18:45 GMT

கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூர் காக்கையாடியில் ஆறுமுக சுப்ரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கார்த்திகை நட்சத்திரம் வழிபாடு நடைபெற்றது. இதில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி, வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ருத்ரஹோமம் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்