2-வது தகுதிச் சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சு

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

Update: 2021-08-13 14:22 GMT
சென்னை,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று இரவு நடைபெறும் 2-வது தகுதிச் சுற்றில்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பீல்டிங் செய்து விளையாடி வருகிறது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி (கே), என்.ஜெகதீசன்(கீ ), ராதாகிருஷ்ணன், சசிதேவ், ஆர்.சதீஷ், ஹரிஷ் குமார், சோனு யாதவ், சாய் கிஷோர், எம்.சித்தார்த், ஆர். அருண், அலெக்சாண்டர்.

திண்டுக்கல் அணி வீரர்கள்;- விமல் குமார், ஹரி நிஷாந்த் (கே), மணி பாரதி (கீ), ஸ்ரீனிவாசன், விவேக், மோகித் ஹரிகரன், சுவாமிநாதன், சிலம்பரசன், குர்ஜப்னீத் சிங், சுதீஷ், விக்னேஷ்

மேலும் செய்திகள்