டி20-ல் அதிக ரன்கள்: கப்டிலை பின்னுக்குத்தள்ளிய ரோகித் சர்மா

டி20-ல் அதிக ரன்கள் அடித்த மார்டின் கப்டிலை பின்னுக்குத்தள்ளி ரோகித் சர்மா முதலிடம் பிடித்தார்.

Update: 2022-02-24 20:19 GMT
கோப்புப்படம்
லக்னோ,

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையாயான முதல் டி20 போட்டியானது லக்னோவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 37 ரன்கள் எடுத்த போது, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரான நியூசிலாந்தின் மார்ட்டின் கப்திலை (3,299 ரன், 112 ஆட்டம்) பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார். 

ரோகித் சர்மா இதுவரை 123 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 4 சதம், 26 அரைசதம் உள்பட 3,307 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவின் விராட் கோலி 3,296 ரன்களுடன், 97 ஆட்டம்) 3-வது இடத்திலும், அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் 2,776 ரன்களுடன் (102 ஆட்டம்) 4-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் செய்திகள்