எதிரணியை வெல்ல அவர் வகுத்து கொடுக்கும் திட்டங்கள் சரியாக இருக்கிறது - ஸ்ரேயாஸ் ஐயர்

எதிரணியை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று அவர் வகுத்து கொடுக்கும் திட்டங்கள் சரியாக இருக்கிறது என ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

Update: 2024-05-26 01:09 GMT

Image Courtesy: AFP

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது, எனது கேப்டன்ஷிப் சாதனைகள் கவனிக்கபடாமல் இருப்பதாக நினைக்கிறீர்களா என்று கேட்கிறீர்கள். இந்த மிகைப்படுத்துதலை உருவாக்குவது நீங்கள் தான்.

ஒரு கேப்டனாக நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 20 ஓவர் போட்டி குறித்து கம்பீருக்கு அறிவு அதிகமாக இருக்கிறது. கொல்கத்தா அணிக்காக அவர் 2 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

மேலும் எதிரணியை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று அவர் வகுத்து கொடுக்கும் திட்டங்கள் சரியாக இருக்கிறது. அவரது அறிவுரையின் உதவியுடன் இறுதிப்போட்டியிலும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்